அழைப்பு!!

முதல் நொடி ஏமாற்றம் நிலைக்காமல் கடந்து விடும் என்ற நம்பிக்கையின் காத்திருப்புக்கு பரிசு.. உன் அடுத்த நொடி அழைப்பு!
ஒவ்வொரு புதிய எண்ணின் அழைப்பும் உனதாக வேண்டும் என்ற ஆசையும் நிறைவேறிய சந்தோஷம் என்னுள்!!
அறிந்தும் அறியாததை போல் விளையாட உன்னிடம் மட்டுமே மனம் யாசித்தது!!
முன்பே யோசித்து வைத்த யோசனைகளும் சுக்கு நூறாய் உடைந்து போனது உன் குரலில்!!
உந்தன் முதல் அறிமுகம் மட்டும் இன்னும் நினைவில் இருந்து விலகவில்லை. இந்த அறிமுகமும் அதை நினைவூட்ட தவறவில்லை!!
நலம் விசாரிப்புடன் துவங்கிய உரையாடல் முடிந்து விட கூடாது என்ற நினைப்பு மட்டும் மனதை விட்டு அகலாமல்!
வழக்கமான கிண்டல்களும் வந்து ஒட்டி கொள்ள சந்தோஷங்கள் மட்டும் மனதில்!
மாற்றம் இல்லா உன் அன்பின் பேச்சில் உன் குரலின் மாற்றங்களை மட்டுமே உணர முடிந்தது.
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன் நட்பு வேண்டும்... எனக்கானதாக மட்டுமே!
நட்பில் கூட உன்னை விட்டு தர எனக்கு மனம் இல்லை.
உரையாடல் முடிந்தாலும் உணர்வில் முடியாத இந்த அன்பு, காலம் முழுவதும் வேண்டும் எனக்கான வரமாக!