+எந்தன் காதல் மண்டியிடும்!+

என்னைக் கூட நானறியேன்!
உன்னை மட்டும் தான்அறிவேன்!
என்னில் வந்த நாள்முதலாய்
என் னறிவாய் ஆகிப்போனாய்!

கண்ணில்கூட காதல் சொன்னாய்!
என்னில்கூட பாசம் தந்தாய்!
பெண்ணே உந்தன் காதல்முன்பு
எந்தன் காதல் மண்டியிடும்!

வண்ணம் தந்து வாசம்தந்து
என்னைமாற்றி என்னை தேற்றி
உன்னில் என்னை மூழ்கடித்தாய்!
என்னை அன்பால் நோகடித்தாய்!

காதல் நோயில் மாட்டிக்கொண்டேன்!
கனவில் உன்னை மட்டும்கண்டேன்!
காதல் தந்த சுவாசக்காற்றால்
கால மெல்லாம் மகிழ்ந்திருப்பேன்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (11-Oct-13, 9:54 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 131

மேலே