மனதெங்கும் வழியும் அமுதம்
” மனதெங்கும் வழிகிறது
அமுதம்
நீ
விரல் தொட்டாலே
வழிந்து விடுகிறது
நீ
கோபித்துப் போனால்கூட
கோணலாகிப் போவதில்லை
இந்த மனம்
அனைத்தையும் இரசிக்கிறது
அமுதம் ஊற்றெடுப்பது
உன்னால் மட்டும்தான்
உன்னை அணைத்துக் கிடைக்கையில்
கிடைக்கும் இன்பம்
எந்த கன்னியிடமும் இல்லை
உன்னை அணைக்கையில்
என்னுள் எந்த மிருகமும்
விழித்துக் கொள்வதில்லை
வெறி கொண்ட
அந்த மிருகம்
சாதுவாய்ப் படுத்துக் கிடக்கிறது
உன் முத்தத்திற்கு
எதையும் கற்பனை
செய்து கொள்வதில்லை
இந்த மனம்
உன் முத்தத்திற்காக ஏங்கும்
அமுதம் வழியும்
உன் முத்தம்
உன்னை நினைக்கையிலேயே
மனம் எங்கும்
வழிகிறது அமுதம்”