நீங்காத நட்பு
அன்றொரு நாள்
பௌர்ணமியில்
நிலவும் வானும் போல
நீங்காத நட்பென்றால்
எதுவென நிலவிடம்
கேட்டேன்
அதிகாரத்தினால்
அடைவதல்ல நட்பு
இரக்கத்தினால் சம்பாதிப்பது
நட்பல்ல
என்றான் சந்திரன்
அங்கனவாயின் உண்மை
நட்பு யாதென
நிலவினை கேட்டேன்
உண்மை அன்பினால் இரு
நெஞ்சங்கள் சேர்வதே நட்பு
என்றது நிலவு