+நட்பு வரவா! செலவா!+

நான் வரவா! செலவா!
என உன் நட்பைப்பற்றி
நீ என்னிடம் கேட்டாய்!

நீ வரவும் தான்!
செலவும் தான் என்றேன்!

எப்படி எனும்படி என்னைப்பார்த்தாய்!

என் கண்ணீரையும் சோகத்தையும்
செலவுசெய்தாய்!

எனக்கு சிரிப்பையும் மகிழ்ச்சியையும்
வரவாக்கினாய்!

சரியா! என்றேன்..

நீ இப்போது எனக்காக
கண்ணீரை செலவு செய்துகொண்டிருந்தாய்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (14-Oct-13, 10:51 pm)
பார்வை : 160

மேலே