காதல்!!...
கடல் கடந்து பூமியெங்கும்
காற்றோடு கலந்திருந்து
உடலிரண்டு சேராதிருந்து
உள்ளத்திருந்து உயிர்பெருவது
காதல்.
உணர்வுகள் ஒருங்கிணைந்து
பூக்களாய் மடல்விரிந்து
மணமாய் படர்ந்திருந்து
இருவருக்குள் நிறைந்திருப்பது
காதல்.
இடைவெளி நிறைந்திருந்து
இருதயம் இணைந்திருந்து
இணையை காண துடித்திருந்து
இன்பம் பெறுவது காதல்.
மணிகளாய் காத்திருந்து
மனம் கவர்ந்தவள் கரம் கோர்த்திருந்து
மண வாழ்க்கையில்
மருவி நிற்ப்பதுவே
என்றும் உண்மைக்காதல்...