சுகமான நினைவுகள்

காவிரி கரையோரம் ...
அமர்ந்தேன் சில நேரம் ...

கண்டேன் நீரோட்டம் ...
நினைவுகளில் நீ ஓட்டம் ....

கரை தொட்டது அன்பாய் ...
உனை கொண்டேன் அன்பாய் ....

நெளிந்து ஓடும் அழகு ... நீர் ....
மனதில் என்றும் அழகு ... நீ ...

துள்ளி விளையாடும் கயலே ....
ஊஞ்சலிலாடும் உன் நினைவே ....

பெற்றேன் அதிலே குளுமை ....
நினைவுகள் என்றும் பசுமை ....

நீர் புறம் நனைக்க ....
நீ அகம் குளிர்க்க ...

உயிரும் பெற்றது சுகம் ...
உயிரும் பெற்றது இதம் ...

எழுதியவர் : R S Arvind Viknesh (16-Oct-13, 11:49 am)
பார்வை : 136

மேலே