அந்தியும் உதயமும்

அந்திக் கருக்கலில்
மேற்கு வானம்
அவசரமாய் விழுங்கிக்
கொண்ட சூரியனைச்
சிறையெடுக்க
யுத்தம் செய்தனவோ...
கூட்டம் கூட்டமாய்
படையெடுத்த
பறவைக் கூட்டங்கள்...

மேற்கு வானில் சிதறிய
செங்குருதியில் சிவந்து...
புகை மூட்டத்திற்குள்
மெல்லப் புதைந்து
போனது பூமி...

இருட்டின்
ஆக்கிரமிப்பில்
இம்சிக்கப்பட்ட பூமி...
கண்ணீர்ப் பனித்துளிகளால்
புல்வெளிக் கைக்குட்டைகளை
அதிகமாய் நனைத்தது...


ஆவேசத்துடன்
அலட்டிக் கொண்டிருந்த
மரங்கள் கூட
அடங்கிக் கிடந்தன...
காற்றின் மௌனப் போராட்டத்தை
மறுதலிக்க முடியாததால்...

எதையும் கண்டு கொள்ளாமல்
எட்டி நகர்ந்தது காலம்...

நிசப்தம் கலைந்தது...
பறவைகள் சந்தோசத்தோடு
சங்கீதம் இசைக்க...
கிழக்கு வானில்
மெல்லச் சோம்பல்
முறித்தது சூரியன்...
மீண்டும் மேற்கு
வானம் நோக்கிய
நகர்தலுக்குத் தயாராய்...!!!

எழுதியவர் : vijaya (16-Oct-13, 8:17 pm)
பார்வை : 318

மேலே