மாறுதல்கள்

நான் முதலில் எழுதிய எழுத்துக்கள்
என் இளமைக்கு இனிமை சேர்த்தவளின்
பெயராக ஆனது...
அவளை அசைபோடும் வேலையில்
வீட்டில் நான் கிறுக்கனானேன்.
அவள் பேச்சை கேட்கும் போதெல்லாம்
என் உடல்பிரதி எவரெஸ்டில் தவழ்ந்தது.
அவ்வளவு ஏன்...
அந்த மதிமுகத்தை பார்த்து
என் விழி இரண்டும் பிதுங்கி
அவளை மெய்ந்து
திரும்ப வர மறுத்ததும் ஏனோ...?
இமைக்கும் நொடியில் அவள் மறைவதால்
எனக்குள் நேர்வது மரணம் தானோ...!!
நான் ஒரு அதிசயபிறவி என்பேன்!!..
காரணம்,
என் சுவாசக்காற்றில் அவள் கலந்ததால்
என் உயிர்காரணிகள் மறுபிரவேசிக்கிறது...
என் இதயம் என்னை நாளும் நலம் விசாரிக்கிறது
அவள் சொல்லாடும் போது
என் பெயரும் நினைவும் அடிபடுவதால் என்னவொ...
அந்த ஆண்டவனுக்குதான் வெளிச்சம்...

எழுதியவர் : கண்ணன் (17-Oct-13, 2:15 pm)
சேர்த்தது : கண்ணன்
பார்வை : 71

மேலே