நானும் ஒரு பொறுக்கி
செய்தி ஏடுகள்
பொழுதுபோக்கு ஏடுகள் (சஞ்சிகைகள்)
வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
வலைப் பக்கங்கள், வலைப் பூக்கள்
எல்லாவற்றில் இருந்துமே
நல்ல அறிவைப் பொறுக்கிப்போடுவன்!
நல்ல நண்பர்களின் வாயால் வெளிப்படும்
நல்ல அறிவைக்கூட
நான் பொறுக்கிப்போடுவன் என அஞ்சி
என்னோட நட்பைப் பேண
பலரும் அஞ்சுவதைக் கண்டால்
நான் எவ்வளவு பெரிய
அறிவுப் பொறுக்கி என்று சொல்லாமலே
நீங்கள் அறிவீர்களே!
படிக்க வேணும் என்ற பிள்ளை
என்னைப் போல
அறிவுப் பொறுக்கி ஆகலாமே!
நானும் ஒரு பொறுக்கி தான்
ஆனால், அடுத்தவர் அறிவை
என்னுடையதென்று உரிமை கோராமலே
"உண்மை பேசு" என்று தானே
அரிச்சந்திர நாடகம் சொல்லுமே என்று தான்
மாற்றார் அறிவை
நானும் பாவிக்கிறேனே!