kudumbam
பன்னீரெண்டு ஈன்றடுத்த
பெற்றோர்
மூத்த பிள்ளை
சுமைதாங்க
மற்ற பிள்ளைகள்
தோள்கொடுக்க
அக்கா தங்கைகள்
அன்புகாட்ட
சுமை தாங்கா
சுகமான வாழ்க்கை
இது அந்த காலம்.
நாம் இருவர்
நமக்கு இருவர்
இல்லை இல்லை
நாம் இருவர்
நமக்கு ஒருவர்
கை நிறைய
பணம் காசு
வீடு வாசல்
கார் எல்லாம்
சுமை சுமை
எல்லா வயதிலும் சுமை
சுமை தாங்க வேண்டிய
மகன் அந்நிய மண்ணில்
சுமையே இறக்கி வைக்க
மகள் இல்லை எமக்கு
பணம் நிறைய உண்டு
வாய் திறந்து பேச யாருமில்லை கூட
தனிமை விரும்பினாலும்
விரும்ப விட்டாலும்
அரவணைத்து கொண்டது முதியோரை
கீதா பாலசுப்ரமணியன்