உன்போல் யார்வருவார்?

உடையிலும் நடையிலும்
உன்போல் ஆயிரம்பேருண்டு!
பேச்சிலும் குணத்திலும்
எனக்கு நீதானுண்டு!

உன் ஆசைப்பேச்சு
எனக்கே எனக்காக!
என் உயிரின்மூச்சு
உனக்கே உனக்காக!

உன் அன்புமுழுவதும்
எனக்கே எனக்காக!
என் வாழ்க்கைமுழுவதும்
உனக்கே உனக்காக!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (19-Oct-13, 10:11 am)
சேர்த்தது : sirkazhi sabapathy
பார்வை : 316

மேலே