கழுதையின் ஏக்கம் ...

எங்கோ
நீ பிறந்தாய்
எங்கோ
நான் பிறந்தேன்
ஒருவரை ஒருவர்
பலமுறை
பார்த்திருந்தும்
இருவரும்
சேர்ந்தது
திருமண நாளில்
தானே
நம் இருமனம்
இணைந்ததும்
ஒரு திருநாள்
தானே

நான் படுத்திருக்க
என் மீது நீ வந்து
தொப்பென்று
விழுவாயே
தொப்பென்று வீழ்ந்தாலும்
தப்பொன்றுமில்லை உன்
மென்மேனி என் மீது
இருந்திட்டால் போதும்
என் சொர்க்கம்
நீ தானே

என் மீது நீ இருக்க
உன் அடியில்
நான் இருக்க
நம் மீது மஞ்சம்
கொண்ட ஜோடிகள்
தான் எத்தனையோ

எங்கோ
நீ பிறந்தும்
எங்கோ
நான் பிறந்தும்
இருவரும் இணை
சேர்ந்திருந்தாலும்
பொழுது
புலர்ந்துவிடின்
உன்னையும்
என்னையும்
பிரித்தேன்
வைக்கின்றார்
பிய்ந்து நாம்
போய்விட்டால்
வீசி ஏன்
எறிகின்றார் தம்
வேலை முடிந்து
விட்டால்
மறந்தெம்மை
விடுகின்றார்
மண்ணில் இந்த
மனிதர்கள்

-------------------------------------------------------
விளக்கம் : கழு + தை = கழுதை.
கழு என்றால் கோரைப்புல்.
கழுதை என்றால் கோரைப்புல் பாய்

எழுதியவர் : (20-Oct-13, 8:03 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 92

மேலே