ஓ தமிழன்னையே .......!!!

ஓ தமிழன்னையே
என்னை மன்னித்துவிடு....

பிரிவினை வாதமும்
பிரதேச வாதமும்
சொல்லியே பிழைத்த
தனிமனித அரசியல்வாதிகளால்
பொன்னான - எம்
தேசமிழந்தோம் அன்று..!

இலக்கண வித்தகராய்
இலக்கியச் சிற்பிகளாய்
தமைக் காட்டிக்கொள்ள
அரங்கிலே வந்தவர்களால்
முகவரியிழந்தோம் இன்று..!

`என் வீடு, என் குடும்பம்`
சிந்தனையின் தொடர்ச்சியாய்
`எனக்கு மட்டுமுள்ள மொழி`
என்று பெருமிதத்தில் பறந்தவரால்
எம் மொழியை நொந்தோம்..!

மொழித் திறமை காட்ட
அடுத்தவனை துகிலுரிந்து,
தன்பாட்டில் வளர்ந்துகொண்டிருக்கும்
தாய்த் தமிழை தன்னால் வளர்வதாய்
பகல் கனவு கண்டவரால் வெந்தோம்,,!

இப்படியே போனால்
வெறுக்கவில்லை தமிழன்னையே
உன்னை நான்... - உன் பெயரால்
அடுத்தவரைச் சபிக்கும்
மனிதரை வெறுக்கிறேன்.....!

`யார் குத்தினாலும் நெல்
அரிசியானால்ச் சரி `........
உமிகளை விலக்கி நல்லரிசியாய்
இன்னமுதமாய் சமிபாடடைவாய்
எம் உணவுப் பைகளினுள் ....!

ஓ தமிழன்னையே
என்னை மன்னித்துவிடு....!!!
-----------------------------------------------------------------------
தமிழின் தோழி (யாழ்)

எழுதியவர் : தமிழின் தோழி (யாழ்) (20-Oct-13, 8:10 pm)
சேர்த்தது : தோழி துர்க்கா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 90

மேலே