ஓர் கோடியில் ஒரு நகை

செவ்விதழோரம்
மின்னலாய்
ஒரு குறு நகை வெட்டி
மறைந்த நொடியில்
கோடி கனவுகள்
அவன்மன வானில்
உதித்தன ஆயிரம் வெள்ளி..
மின்னும்
வெள்ளிகள் நடுவே
நிலாவெனவும் . அவளே....!
தண்ணொளி குளித்தும்
தீர்ந்திடா ஆவலில்
கவிரசம் தேடி
கவிதைகள் பாடிப்
பரவசமானான் .
நியூட்ரானால்
ஈர்க்கப்பட்டு ,
சுழலும் எலெக்ட்ரான்
இது அணுவிதி...
ஆனால் அவளால்
ஈர்கப்பட்ட அவன்..!
"ஹார்மோன் விதி"
எனப்படுவது இதுதான்போலும்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

நீ ஓர்...
கவின் சாரலன்
29-Mar-2025

போகுமிடம் வெகு...
Ashok4794
29-Mar-2025
