குறைப்பிரசவத்தில் தேவதைகளை இழந்த தாய்!
ஆழ்ந்த நினைவலைகளில்
மூழ்கியபடி அமர்ந்து இருக்கிறேன்
உங்கள் நினைவாக நான்!
நீங்கள் யாரைப்போல இருந்திருப்பீர்கள்,
எவ்வளவு வளர்ந்திருப்பீர்கள் என்று
அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்!
உங்களில் ஒவ்வொருவரையும் எண்ணி
உள்ளத்தில் ஒவ்வொரு நாளும்
வேதனைப்படுகிறேன்!
நீங்கள் இருந்திருந்தால் பார்ப்பதற்கு
நாம் ஒரே மாதிரித்தானே இருந்திருப்போம்
என்ற எண்ணத்தை விலக்க முடியவில்லை!
பல நாட்கள் கண்ணீரில் மிதக்கிறேன்,
நீங்கள் எனக்கு ஒரு இனிய சங்கீதம் போல,
என்றும் என் பிரார்த்தனைகளில் நீங்கள்!
நீங்கள் ஆணா! பெண்ணா! நானறியேன்,
என் உதிரத்தின் என் இனிய தேவதைகளே
சின்னஞ் சிறுசுகளே!
நல்லதொரு நாளில் நாம் சந்திப்போம்,
அந்தத் தருணம் மிகவும் இனிமையானது,
என் வாழ்வின் அந்த நாள் ஆனந்தத்தில் எல்லை!
நான் உங்களைச் சில வாரங்கள்தான்
வயிற்றில் சுமந்திருந்தாலும் என்றும்
உங்கள் அன்னை நான்தான்!
குட்டித் தேவதைகளை
குறைப்பிரசவத்தில்
இழந்த தாய் நான்!