வில்
புருவமெனும் நாண் வளைத்து
விழி வழியே அம்பெறிந்தாய்!
இமைகள் என்னும் இறகுகளால்
இதயம் கொஞ்சம் வருடினாய்!
சொர்க்கமும் நீ நரகமும் நீ
ஏனோ இரண்டுமாய் வாட்டினாய்!
உன் விழிகளுள் வீழ்ந்து விடவோ?
உன் உள்ளத்து உறவாக வரவோ?
வில்லாக எனை இன்னும் வளைக்காதே!
சொல்லாத ஒரு சொல்லால் கொல்லாதே!
கன்னி வைக்கும் கண்ணே
வேண்டாமே யுத்தம்............
எண்ணி நானும் மயங்க
தேவை ஒரு முத்தம்...........