காதல் கொண்டேன்......
தனிமையில் கதைத்தேன்
தனிமையில் ரசித்தேன்
தனிமையில் சிரித்தேன்
தனிமையில் அழுதேன்
நினைவினில் நினைத்தேன்
உன் நினைவுகள் மட்டுமே
என் மனதினில்.....
இதயத்தில் ஓர் இதயம்
சுமப்பதை உணர்கிறேன்
என் உடல் உன் உடல்
என்றும்
என் மொழி உன் மொழி
என்றும் தளுவினேன்...
மனதினில் காதல்
என்பதை உணர்துவிட்டேன்..
பல முறை உன் மொழி
கேட்க துடிக்கிறேன்
ஒரு முறை உன் முகம்
காண கேட்கிறேன்....
விடிந்த பின்னும்
விடியாத பொழுதை
என் மனம்
உன் முகம்
காண துடிக்கிறது...
இரவுகள் கூட பகலாக..
உன் நினைவுகள்
என்னை மாற்றியது..
என் கண்களை
உற்று நோக்கிடு
என் மனம் உனக்கு
புரிந்துவிடும்
ஒரு முறை என் உதடுகளை
தீண்டிப்பார் அக்கணம்
என் உணர்வுகளை
நீ உணர்வாய்....