காலத்தே பயிர் செய் தம்பி..

முழு மதியை அரவம் விழுங்கிய நாளில் தொடங்கிற்று சந்திர கிரகணம்..
மணிமொழி அவளின் விழிகளை நாடியதில் தொடங்கிற்று இவனுக்கும் கிரகணம் ..

கன்னி அவள் காண்பதினால்
காளை ஆகிவிட்ட பெருமிதமும் வந்திடவே..
மறந்தனையோ மைந்தா
மண்குடிலில் மண்டிக்கிடக்கும்
நமது கனவுகளையே ..

பட்டம் பெற்று பாரினில்
புகழ் பல பெற்று
வந்திடுவான் வென்றிடுவானென
இங்கு தாயின் உள்ளம்..

பாவை அவளை மதியில் கொண்டு
பறந்திடும் எண்ணங்கள் உண்டு
இங்கு தனையன் உள்ளம்..

விடலை பருவமே இது
மறுத்திடவில்லை...

வியர்வை சிந்தி
கைகளில் காப்பு வந்திட உழைத்திட வேண்டாம்..
கல்வியின் வசமே
உன்னை உயர்த்திடும் விந்தைகள் பல உண்டு
மறந்திட வேண்டாம்..

காலத்தே பயிர் செய் தம்பி..

எழுதியவர் : தமிழ் மகள் (23-Oct-13, 7:23 pm)
பார்வை : 220

மேலே