முதல் தோழிக்கு..

> மணல்வெளி மடியினில்
மழைத்துளி விழுந்ததில்
உயிரென உள்சென்று
புதைந்தாயே..!
நிலவொளி
பூமிக்குத் தடைபட
உணர்ந்ததும்
அடடா ஒளியாய்
உதிர்த்தாயே..!

> வண்ணத்தும்பி
வாசம் தந்த
மொட்டுக்கொரு
முத்தமிடும்
நட்புக்குள்ளே
கை குலுக்கும்
நேரமென்றதே..!

> வானைச் சுற்றும்
மேகக்கூட்டம்
மின்னலொன்றை
விட்டெறிய
விண்ணும் மண்ணும்
கை குலுக்கும்
நேரமென்றதே..!

> தோழி நீயே
உன் அன்பால்
வென்றாயே..!
தோழன் நானும்
நம் உலகம்
வியந்தேனே..

> காலம் தொலைந்தாலும்
நம் காலம்
தொடராதோ..?
யாவும் அழிந்தாலும்
நம் பாதை இடராதே..!

> உயிர் தின்னும்
உறவெதுவோ..?
உள்ளங்களின்
மடியெதுவோ..?
நட்பென்று சொன்னால்
மிகையாதோ உன்னால்..!

> அன்னைகளின்
அன்பு எதுவோ..?
தந்தைகளின்
அன்பு எதுவோ..?
நண்பனின் தோளில்
சாய்ந்தாலே
புரிவாய்..!

> அரும்பாக முளைத்தாயே
பொலிவாக ஒளித்தாயே
உயிராக
என்னுள் வாழ்கின்றாய்..!

> கிளைவிட்டு விழுதானாய்
மனம் தொட்டு பதிவானாய்
நெடுங்கால
நட்பின் வரலாறாய்..!

தோழி நீ வாழ்க பல்லாண்டு..



இங்கணம்
உன்
“அம்மு”டா.

எழுதியவர் : -செல்ல.கார்த்திக் (23-Oct-13, 11:43 pm)
பார்வை : 417

மேலே