======எனது பக்கங்கள்========

பக்கங்களிலிருந்து விழுந்துவிடுவான்
அதனால், மெதுவாக புரட்டுகிறேன்
ஒரு பக்கம் அவனை
மென்மையாக்குகிறது.
இடையே கைகளை நீட்டி
ஒரு பக்கத்தை அவள் கைப்பற்றிவிடுகிறாள்.
படிக்கவோ
புரிந்துகொள்ளவோ முடியாத
இரு பக்கங்களுக்கிடையே இருந்து
ஆறுபோல பாய்ந்து செல்கிறது...
யாரோ ஒருவரின் தலைமுடி
அந்த ஆறு,
தொங்கிக்கொண்டிருக்கிறது
அதன் நுனியில் அமர்ந்து
மீண்டும் பறக்கிறது ஒரு ஈ.
மூடிவிட்டு
திரும்பவும் பக்கங்களைப்
புரட்டத் தொடங்குகிறேன்.
பக்கம் பக்கமாக ஒரு கதை
சுழித்து ஓடிக்கொண்டிருக்கிறது
அதைப் பின்தொடர்ந்து சென்றேன்
ஆற்றின் மறு கரையில்,
சுவரில் ஒட்டப்பட்ட
இறந்தவரின் புகைப்படம்போல
ஆசிரியர் இருந்தார்.
அந்த மரணத்திலும்
புன்னகைத்தபடி.
மீண்டும் ஆரம்பத்திலிருந்து
பக்கங்களைப் புரட்டுவேன்
அப்போது பக்கங்கள் மறைந்திருந்தால்
மிக்க நல்லது.

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (23-Oct-13, 11:45 pm)
சேர்த்தது : ifanu
பார்வை : 69

மேலே