இரவுதிர்ந்த பூக்கள் புதுக் கவிதை

இரவுதிர்ந்த பூக்கள் (புதுக் கவிதை)

(உதிர்ந்தவை உதிர்ந்தவைதான்),,,,

பிறப்பின் தீர்வுக்கான
காரணங்க ளெல்லாமே

விதியென்ற தீர்ப்பினிலே
விழி யகன்றுக் கிடக்கிறது

இறக்கத் திறப்புகளின்
உள்ளங்கைகள் பூட்டப்பட்டமையால்
இறங்கநேரிய கௌரவச்சிரங்கள்

ஓட மறுக்கிற மனக்குதிரைச்
சுயநினைவுக ளெல்லாம்

உபதேச வாயில்களால்
கட்டப்பட்ட நிர்மலங்கள்

கடக்கிற நாட்களின்
படிக்கட்டுகளின் மேலே
முடிவுகளற்ற நிர்பந்த யாத்திரை

நடைப்புரண்டக் கால்களுக்கு
மிதிப்பட்டக் கற்களால்

முன்கோபப் பிரகடனத்தில்
முறிபட்டக் கண்ணாடி

முறையிட்ட மனுக்களிலே
மூடியக் கதைகளெல்லாம்

விரிப்பந்தலில் விரித்த
விலைப்போகா பட்டுக்களாக

சாய்க்காற்றாடி ஓட்டத்தில்
சஞ்சலித்தக் காகிதத் துளியாய்

கேளிக்கை நகரா
உட்களைக் கூத்துகள்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (26-Oct-13, 4:28 am)
பார்வை : 109

மேலே