கடவுளுக்கு ஒரு கடிதம்

மன வலையை விரித்தேன் உணவாக
மீனானாய்......!

கூட்டுக்குள் ஐம்புலன் அடக்கிப் பயில
கூர்மமானாய்...!

வண்ண ஞானம் ஆழ்ந்து தோண்டி எடுக்க
வராகமானாய்...!

நாராயணன் நான் சிங்கத் தமிழன் என்றறிய
நரசிம்மனானாய்....!

வாட்டும் கர்வம் வதைக்காமல் தடுக்க
வாமனனானாய்.....!

பணிவையே பழகி துணிவையும் பெற
பரசுராமனானாய்....!

எந்நாளும் நன்னெறி நடக்க இறைவா
எழில்மிகு ராமனானாய்..!

பலத்தை மனத்தில் வை எனச்சொல்ல
பலராமனானாய்......!

பந்தங்களை தூரவைத்து பரமாத்மாவை
பண்போடு நெஞ்சில் வை எனச் சொல்ல
பண்புடனே கண்ணனானாய்.....!

காலம் இந் நிகழ்காலத்தில் மனித உருவில்
கல்கிஎன கருணை பொழிகிறாய்....!

ஹே மாதவா - மது சூதனா - மன்னர் மன்னா...!
மனமுவந்து வணங்குகிறேன்.....!

சனிக்கிழமை இன்றும் வழக்கம்போல் அனைவருக்கும்
சந்தோசக் கிழமையாக திகழ
வாழ்த்தி வரம்கொடு...

இப்படிக்கு

அன்புடன் ஹரி

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (26-Oct-13, 8:16 am)
பார்வை : 99

மேலே