இது மட்டுமா வேடந்தாங்கல்
இது மட்டுமா வேடந்தாங்கல்!
இன்னும் எத்தனையோ!
இருக்குத் தாங்கல்!
பறக்குந் தூரத்தில்
அது தேடும் பொருத்தங்கள்
ஆவதெங்கு அமையுமோ!
அதுக்குத் தாங்கல்.
அதனது விருப்பத்தில்.
எந்த மண்ணும் சொந்தங்கள்
எங்கேயும் இருக்குமோ!
எதுக்கதுத் தாங்கல்
ஏற்காவிடத்தில்?
உலக மெல்லாந் தங்கிடங்ககள்
உரிமையும் உள்ளதோ!
எங்குந் தாங்கல்.
ஏற்குமிடத்தில்.
இருக்க மட்டும் இருப்பிடங்கள்
விருப்பம்போல் பறக்குமோ!
மறந்திடுந் தாங்கல்.
மாறிடுமிடத்தில்.
தேடும் நல்ல சுகவிடஙகள்.
கூடித்த்ன் உறவையோ!
ஓடிடுந் தாங்கல்.
நாடிடுமிடத்தில்.
அது வாழும் புதுவிடங்கள்
புது உறவு கொள்ளுமோ!
அப்புறமுந் தாங்கல்
அதுமுடிவாவதில்.
பறவைகளும் பலவிடங்கள்
பறந்தும் சென்றனவோ!
எங்கெங்கு தாங்கல்
தாங்குமிடங்களில்.
கவிஞனும் எவ்விடமும்
கட்டுண்டிருப்பனோ!
எழுதிடத் தாங்கல்
இயங்கும் உலகினில்.
கொ.பெ.பி.அய்யா.