தலைமுறை மாற்றம்
ஆலமரத்தில் ஊஞ்சல் ஆடியது
ஊர் குளத்தில் நீச்சல் அடித்து விளையாடியது
நண்பர்களோடு கூட்டாஞ்சோறு சாப்பிட்டது
அடுத்த வீட்டு தோட்டத்தில் இளநீர் திருடி குடித்தது ஊர் பொங்கல் அன்று
நண்பர்களோடு சேர்ந்து போட்ட ஆட்டம்
யாருக்கும் தெரியாமல் ஊருக்குவெளியில் சென்று கள் குடித்தது
எல்லாம் நினைவுக்கு வந்து கண்களில் நீர் ஊறியது அப்பாவுக்கு
சுட்டி டிவி பார்த்து
பிஸ்ஸாவும் நூடூல்சும் சாப்பிட்டு
வளரும் தன மகனை பார்க்கையில்.