உன் அன்பும் நானும்
உன் அன்பு
அளவும் குறைந்ததில்லை
நான்
உன் மேல்
வெறுப்பை தந்தாலும்...
உன் அன்பு
என்றும் நிலை குலைந்ததில்லை
நான்
உன்மீது
கோபம் கொண்டாலும்...
உன் அன்பு
என்னை தனித்துவிடுவதில்லை
நான்
உன்னை கடந்து
எங்கு சென்றாலும்...
உன் அன்பு
தடம் மாறியதில்லை
நான்
உன்னை இன்னும்
காத்திருக்க சொன்னபோதிலும்...