மனதைக் கவர்ந்த மாபெரும் நடிகர்

கவலையேதுமின்றி
சிட்டாய் சிறகடித்த
சிறு பராயத்தில்,
அன்பு அண்ணனுடன்
சேர்ந்து பார்த்து ரசித்தது
எம்.ஜி.ஆர் படங்களே...!

புரட்சித் திலகமாய்
மாபெரும் அரசியல்வாதியாய்
ஏழைகளின் தோழனாய்
ஈழமண்ணின் ஆதரவாளராய்
என்னிதயத்தைக் கவர்ந்த
உத்தம தலைவனவர்......!

கம்பீரத் தோற்றத்தில்
கனிவான பார்வையில்
இதயம்தொடும் நடிப்பில்
எப்போதும் மறக்கமுடியாத
எம்மிதயங்களில் வாழும்
நிகரற்ற மனிதக் கடவுளவர்..!

இப்போது அவர் இருந்திருந்தால்
எப்படி மாறியிருக்கும்
எம் ஈழத் தமிழரின் தலைவிதி..!
நினைத்துப் பார்த்தால்
என்னையறியாமலே வடிகிறது
தாரை தாரையாய் கண்ணீர் ..!

மழலைகளுடன் மழலையாய்
ஆடி ஓடி பாடி மகிழ்ந்த
நெஞ்சைத் தொடும் பாடல்கள்
எத்தனை சந்ததி கடந்தாலும்
இதயம் வருடும் கானங்களாய்
என்றும் வாழும் இன்னிசைகளாய்..!

`அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
அது ஆணவச் சிரிப்பு - இங்கே
நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும்
நாள் வரும்போது அப்போ சிரிப்பது யார்
அழுவது யார் தெரியும் அப்போது ...!`

இனிக்கவைக்கும் யதார்த்த வரிகளை
துன்பம் சூழ்கையில் நினைக்கையில்
எங்கிருந்தோ புத்துணர்ச்சி
நரம்புகளினூடு இதயத்துள் பாய்கிறது...
அவரின் ஆளுமைபோல் ஆணித்தரமாய்..!

வரிகளின் சொந்தக்காரனும்
வானத்தை ஒட்டிய புகழில்...
வாயசைத்து சிகரம் தொட்டவரும்
வாழ்நாள் பூராவும் - எம்
ஈழத் தமிழர் மனங்களில்
அழிவேயில்லாமல் எப்போதும்..!!!
----------------------------------------------------------------
தோழி துர்க்கா

எழுதியவர் : தோழி துர்க்கா (28-Oct-13, 4:00 am)
சேர்த்தது : தோழி துர்க்கா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 841

மேலே