பொக்கை வாய்ப் புன்னகை

இரண்டாயிரம் ரூபாய் பட்டுப்புடவை
அந்தஸ்த்து குறைவாம்...!
என் மனைவி
மூலையில் அமர்ந்து முணங்கும் போதுதான்
நினைவுக்கு வந்தது...,

நான் கொடுத்த இரு நூறு ரூபாய் சருகுப் புடவையை ,
" என் புள்ள தந்த புடவை "என
பக்கத்து வீட்டுக் கதவு தட்டிப் புகழ் பாடிய
என் அம்மாவின்
பொக்கை வாய்ப் புன்னகை....!!!

எழுதியவர் : ஹஸான் ஹுசைன் (28-Oct-13, 5:45 pm)
பார்வை : 84

மேலே