மறைக்கிறேன்

முகமுகமாய் உன்னை கண்டாலும்
மறைமுகமாய் ரசிக்கிறேன் உன்னை,
ஆயிரம் வார்த்தைகள் உன்னோடு
பேசினாலும்,
கோடி வார்த்தைகளில் மறைக்கின்றேன்
என் மனதை.
தோள்கள் ஓட்டாமல் தோழனாய்
என்னோடு நீ கடந்த பாதைகளை
மீண்டும் கடக்கிறேன்.
உன் கரம் பிடித்து
என் கற்பனையில்.....................