தம்பி திருந்துவாய்
வியர்வைத்துளி மண்ணில் விழ
நாளும் உழை-பலரின்
கண்ணீர்த்துளி விழவைப்பது
தம்பி பிழை..!
உனைச்சுற்றியும்
கொலை வாளிருக்குது
பசியாறிட அது காத்திருக்குது
தீய செய்கைகள் -நீ விலக்கிடு
தீய நன்பரை நீ தவிர்த்திடு
வாழ்வில் உயர்ந்திடும்
வழிகள் கண்டிடு
சுற்றி நடப்பவை-உனை
பற்றியிருப்பவை
முற்றிலும் தவிர்....!
கற்றவர்,உற்றவர்
சொற்படி நட...
தீயவழி என்றும் தீமையே தரும்
நல் வழி தேடியே நீ நடந்திடு
நன்மைகள் செய்துமே நீ சிறந்திடு
பண்பில் சிறந்திடு
பாரில் உயர்ந்திடு
வம்பு தவிர்த்திடு வல்லமை
சேர்த்திடு-உனை
நம்பியிருப்போர்க்கு
நம்பிக்கை தந்திடு...!
எந்தன் சொற்படி கேட்டு நீ
நடந்திட்டால், தம்பி திருந்துவாய்..!