மாறிப்போன தீபாவளி
![](https://eluthu.com/images/loading.gif)
ஒவ்வொரு வீட்டிலும் குப்பைகள் ...
எங்கள் வீட்டில் அதிகம் ...
இல்லை எங்கள் வீட்டில்தான் அதிகம் ...,
என்று போட்டி போடும் சிறுவர்கள் ,
வெடி சத்தங்கள் கிழவி காதை கிழிக்க ,
டேய்..,
வெளியே போய் வெடிங்கடா...
ஆடு மாடு எல்லாம் பயப்படுது பார் ..,
என்று பாட்டின் அட்வைஸ் ...!
முழங்க்காளிர்க்கும் ,குதிகாலுக்கும்
என்னை போட்டு தேய்க்கும் அப்பா ...
தனக்கு எடுத்து வந்த புதிய ட்டிரஸை கையில் எடுத்தபடி ...,
அடுப்பு ஊதும் அம்மாவிடம் ஓடி ,
அம்மா பலகாரம் ...
என்று கேட்கும் தம்பியிடம் ...,
இல்ல செல்லம் ,குழிச்சிட்டுதான் சாப்பிடுனும் ,
இல்லைனா....
சாமி கண்ணை குத்திடும் ,
அணைத்திடும் அம்மாவின் கரங்கள் ...,
அப்பா ,என் மத்தாப்பை திருடிட்டான்
குட்ரா ...,
என்று சண்டைபோடும் தங்கை ...,
கையில் பிடித்தப்படி பட்டாசை வெடிக்க ,
அதை வேடிக்கை பார்க்கும் பக்கத்து வீட்டு பெண்ணிடம் ,
தன் தயிரித்தை காட்டும் என் அண்ணனிடம் ..,
டேய் பாத்து வேடிடா..
என்று அம்மாவின் சத்தங்கள் ....
பட்டாசை பாக்கட்டில் போட்டுகொண்டு ,
அடுப்பில் பத்த வைத்த ஊது பத்தியும் பாக்கட்டில் போட்டுக்கொண்டும் ,
ஓடும் சிறுவன் ...
பின் ...,
டாமால் டுமால், டிமில் டாமால்தான் ....!
நான் சின்ன வயசுல எப்பிடியெல்லாம் பட்டாசை வெடித்தேன் தெரியுமா ....?
அது எல்லாம் ஒரு காலம் ...
அந்த காலம் எல்லாம் போயிடுச்சி ...
என்று மாமாவின் சரங்கள் ....
தொங்க போட்டு யிருக்கும்
தோழ் உரித்த ஆட்டில் யிருந்து எடுக்கப்பட்ட "செவ்ரொட்டியை" தனியாக எடுத்து வைக்கப்பட்ட ஆளிடம் ,
வை வை சரக்குக்கு வேணும்
ஆட்டின் முதுகு எலும்பை வெட்டியபடி என் தாத்தா...!
அங்கும் இங்கும் டாமால் டுமால் சத்தத்திலும் ,
கிரிக்கெட் மட்டையை எடுத்துக்கொண்டு ,
"நான் இன்னைக்கு அடிக்கிறேன் பாரடா சிக்ஸ்...!"
கூட்டத்தில் குதுகளம் ஆடும் ஒருவன் ...
வழக்கம் போல் இன்னைக்கும் ,
"டக் ..டக் ..தான்..."
இன்னொருவனின் குமரல்...
டாமால் டுமால் ...,
வெடி சத்தம் இரவில்
வானெங்கும் ஒளிர ..,
ஒவ்வொரு வீட்டிலும் கரி கொழம்மு வாசம் வீச ..,
கரிகி விட்டது !....."அன்றைய தீபாவளி "....!