தமிழ்மகனே
போதைதுற-தினமொரு
மாது எனக்கழியும்
வாழ்வை மற!
தீமை கழி-இயன்றால்
பலர்க்கு நன்மையளி
வன்மம் களை-உடல்
வருத்தி நன்றே உழை.!
கூடம்மனை,கோவில், தெரு
கூத்தடிக்கும் வாழ்வைவிடு
சூடம் எடு
கோவில் தொழு
ஏற்றமிகு வாழ்வுபெற
அருள் வேண்டி எழு..!
மனதிருக்கும்
அழுக்குகளை தூரப்புதை
மீண்டும் உனை அணுகா கவசமிடு
புத்திதெளி-பலர்க்கு
சக்தியளி..
வாழ்வில் சித்திபெற நேர்வழியில்
விரைவாய் நட
ஊருக்குழை..உனக்குமுழை
பேருக்கெனப் பெருமை பேசா
குணத்தால் உயர்..!
இனத்தை நினை-பலரின்
பலத்தை இணை
வீழ்த்தமுடியாப் பலமாய்
அணைத்தும் அமை
கொள்கை வகு-கொடையாய்
உயிரைக்கொடு
வாழ்வை வென்று நீயும்
புகழ்படைத்து விண்ணைத்தொடு..!