எல்லாம் தெரிந்தவர்
எல்லாம் தெரிந்தவர்
எவருமில்லை
அரைவேக்காடுகளில் சிலரே
எல்லாம் தெரியும்
என்று பிதற்றுவார்கள்.
முழுமையைச் சிறுவிஷயங்களில்
அடையாளம்.
சிந்தனைக்கு விருந்தாகும்
செயல்களில்
முழுமை ஞானிக்கும்
கிட்டாமல் போகும்.
ஒழுக்கமும் இல்லாதவரே
எல்லாம் தெரிந்தவர் என்று
பறைசாற்றிக் கொள்வார்.