+பல்லு போன சுந்தரி+

அய்யா கேளு அண்ணா கேளு
பாட்டு ஒண்ணு பாடுறேன்!
அம்மா பாரு அக்கா பாரு
ஆட்டம் கொஞ்சம் போடுறேன்!

சின்னப் பொண்ணு நானு தான்!
வெவரமான ஆளு தான்!
கன்னக் குழி இல்ல தான்!
அறிவிருக்கு நிறைய தான்!

நெறமோ கொஞ்சம் கருப்பு தான்!
ஆனாலுமே அழகு தான்!
நான் சிரிச்சு வாங்கி யதோ
பல்லழகி பட்டம் தான்!

வரி சையான பல் வரிசை
எல்லாத் துக்கும் பிடிக்குமே!
கரி சனமா பார்த்துக் கிட்டேன்
தினமும் நல்லா வெளக்கித்தான்!

வயசு கொஞ்சம் ஆக ஆக‌
பற்கள் ஆட்டம் போட்டுச்சு!
ஒரு பல்லு ரெண்டு பல்லுனு
ஒவ் வொண்ணாத்தான் விழுந்துச்சு!

சிரிச்சு திருஞ்ச நானு மிப்போ
வாய மூடி திரியுறேன்!
பல் அழகி போயி ஆனேன்
பல்லு போன சுந்தரி!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (4-Nov-13, 9:56 am)
பார்வை : 136

மேலே