நீயும் நானும்

விழும் போது
தூக்கிவிடு
அன்போடு
கட்டியணை
தாயாய் நீயும்
மகளாய் நானும்

தோல் கொடு
கொஞ்சம்
சாய்ந்திட
உன் தோலில்
தோழனாய் நீயும்
தோழியாய் நானும்

கைகொடு
எனக்கு
பல படிகள்
ஏறிடவே
ஆசானாய் நீயும்
மாணவியாய் நானும்

துடைத்திடு
கண்களை
என் கண்கள்
கண்ணீர்
சிந்தும் போது
காதலனாய் நீயும்
காதலியாய் நானும்

உணர்வுகளை
கவிதுளியாய்
மாற்றிவிடு
கவிஞனாய் நீயும்
ரசிக்கும் ரசிகையாய் நானும்...

எழுதியவர் : பர்ஹா முனீர் (4-Nov-13, 5:08 pm)
Tanglish : neeyum naanum
பார்வை : 111

மேலே