தேவதையோ
நிலவின் பட்டொளியிலே
வானவில்லின் வர்ண ஒளியிலே
இருட்டும் வெளிச்சமும்
அமைந்த பொழுதினிலே
ஒர் அழகிய பெண்
ஒயிலாக வந்தாள்
சிவந்த நிறமும்
அடர்ந்த கூ ந்தலும்
வாளிப்பான் உட லும்
அளவான உயரமும்
பொருந்திய பெண் அவள்
கண்டோர் வியக்க
கேட்டோர் ஆனந்திக்க
பார்த்தோர் புகழ
மயில் போல்
ஓயாரமாக வந்தாள்
அவள் ஒரு மயிலோ
அவள் ஒரு அன்னமோ
அவள் ஒரு தே வதையோ
என்று மயங்கிய வேளையில்
மாயமாக மறை ந்தாள்.