இரண்டாம் அத்தியாயம் -19
தன மீது விழுந்த நிழல் யாரென்று திரும்பிப்பார்த்தான் மதன்
அது வேறு யாருமில்லை முத்து தான்
"என்ன மதன் நிலா வ எங்க போய் பாக்க போற "- என்றான்
இந்த கேள்வியை மதன் எதிர்ப்பார்க்கவே இல்லை
அவன் மௌனம் காத்தான்
"என்ன மதன் என்ன நடக்குது இங்க சுந்தர் எப்போ சென்னை வந்தான் சொல்லு மதன்" என்றார் முத்து
மதன் தான் இதுவரை நிலாக்காக செய்த எல்லா செயலையும் ஒன்று விடாமல் சொல்லிவிட்டான்
முத்து கணகள் கலங்கிவிட்டன.
"மதன் எனக்காக நீ இவ்ளோ தூரம் பண்ணிருகன்னு நினைக்கும்போது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு ஆனா வாழ்க்கைல சில நிமிடங்கள் கடந்து போனது போனது தான் அது திரும்ப கிடைக்காது, அதனால் நீ நிலாவ தேடுற வேலைய விட்டுடு பா "- என்றார்
மதன் அப்போதும் மௌனமாகவே இருந்தான்
"சரி வா போலாம் மணி 4.30 ஆகிடுச்சு", என்று அவனை அழைத்து கொண்டு நடந்தான் முத்து
அப்போது எங்கிருந்தோ வந்த பந்து முத்துவின் மீது மோதியது
யார் அடித்தது என்று பார்த்தான் மதன்
பந்து வந்த புறத்திலிருந்து ஒரு சிறுவன் ஓடி வந்தான்
"அங்கிள் அங்கிள் அந்த ball தாங்க அங்கிள்"
என்றான்
"ஏன் டா ball -லால அடிச்ச " என்று அவனை அடிக்க போனான் மதன்
"சின்ன பையன் மதன் தெரியாம பட்டுருக்கும் " என்று தடுத்தான் முத்து
"உன் பேர் என்னப்பா ?" என்றார் முத்து
"முத்து "-என்றான் அந்த சிறுவன்
"அட, ம்ம் நீ என்ன படிக்கிற? உங்க வீடு எங்க இருக்கு" -என்றார் முத்து
"நான் 2 nd std படிக்கிறேன் , வீடு வளசரவாக்கம்
நிலா கார்டன்"- என்றான் அந்த சிறுவன்
"ஆமா உனக்கு யார் டா இந்த பேர் வச்சா" - என்றான் மதன்
"என் அம்மா தான் "
"யார் உங்க அம்மா இங்க இருக்காங்களா ?"- என்றான் மதன்
"ம்ம்,,,,,,,, வந்திருகாங்களே அதோ "- என்று தன் பிஞ்சு கைகளை ஒரு திசையில் நீட்டினான்
மதனும் முத்துவும் அந்த பக்கம் பார்த்தனர்
இருவரும் உறைந்து போயினர்
அங்கு இருந்தது
" நிலாவே தான் ",,,,,,,,,,,,,,,,,,,