பாட்டு ஒன்னும் பாடட்டுமோ

குயில் எதற்குப் பாடுவதோ!
மயில் எதற்கு ஆடுவதோ!
மனம் மகிழும் சோலை இதோ!
மனம் விரும்பும் காதல் அதோ!

என்ன அது இலக்கணமோ!
இருக்கும் அந்தக் கலைகளுக்கோ!
என்னக் குறை இருந்திடுமோ!
எண்ணம் அதில் நிறைந்திடுமோ!

ஒலிதானே இராகம் அதோ!
ஒலி அசைவே இசைதானோ!
இசைச் சீர்கள் அளவாச்சோ!
இனிய சந்தம் இழையாச்சோ!

இராக ஒலி அசைவுகளோ!
அசைவுகளும் இசைந்தனவோ!
சந்தம் சீர் அளவுகளோ!
சங்கீத இராகங்களோ!

குயில் அங்கேப் பாடியதோ!
மயில் அதற்கும் ஆடியதோ!
எந்தப்பாடம் படித்தனவோ!
இயற்கை அதன் குருதானோ!

பழகக் கலை வாராதோ!
அழகு நிலைச் சேராதோ!
அனுபவமே அளவுகளோ!
அதன் பேரே இலக்கணமோ!

மரபு வழி அனுபவமோ!
மனம் பழகிக் கூடாதோ!
உறவு மொழி பழகாதோ!
உணர்வுக் கவிச் செய்யாதோ!

பாட்டு ஒன்னும் பாடட்டுமோ!
பாடி அதை எழுதட்டுமோ!
இசை உடையும் இடம் எதுவோ!
இசைக்கப் பயிலத் தெரியாதோ!

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (6-Nov-13, 9:03 pm)
பார்வை : 125

மேலே