கூறிடுமா

என் அன்பானவனே ....
என் நெஞ்சை எடுத்து
உன் நெஞ்ச்சோடு இணைத்தாய் !!

என் நெஞ்சின் நினைவும்
அதன் அமைதிதானும்
இப்பொழுது எனக்கில்லை ...!!!

நீ வைத்த
அன்பு இதயமோ
உன்னையே நாடி நிற்கின்றது ...!!!

கொத்தவரும் கிளியை
கொத்தாதே என்று
பழங்கள் தான் கூறிடுமா ...?

சுத்த வரும் வண்டுகளைதான்
சுத்தாதே என்று
மலர்கள்தான் கூறிடுமா ...?

உலா வரும் நிலவைதான்
உலா வராதே என்று
வானம்தான் கூறிடுமா ...?

ஆர்பரிக்கும் அலையைதான்
ஆர்பரிக்காதே என்று
ஆழ் கடல்தான் கூறிடுமா ...?

உன்மேல்.......!!!

ஆசைகொண்ட நெஞ்சைதான்
ஆசைகொள்ளாதே என்று என்
அடி நெஞ்சும் கூறிடுமா ...?

எழுதியவர் : umamaheshwari kannan (6-Nov-13, 11:18 pm)
Tanglish : kooridumaa
பார்வை : 120

மேலே