சோகம் கொட்டும் சொட்டுக்கள்,,,,

நிலவு விழுந்து கிடக்கும்,
கரையில் அலைகள்
கொட்டிவிட்டுச்செல்லும் நுரைகளை....!

என்னை முந்தி
நண்டுகள் பூசிக்கொள்ளும்....!

முரண்பாட்டுச் சிக்கலுக்கான விடைகள்
தேடுகின்ற பயணங்கள்,
கோட்பாடுகளுக்குள் அடங்கப்படாத வாழ்வியல்,
ஆசைகள் இழுத்துச்செல்லும் சூழ்நிலை,

ஏன் ? எதற்க்கு ? எப்படி ?

என்கிற வினாக்களோடு
சிகரெட் சிந்தனையைத் தட்டிவிடும்.

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (8-Nov-13, 10:49 pm)
சேர்த்தது : ifanu
பார்வை : 54

மேலே