சிந்தனை அலைகள் வீர மாமுனிவர் 8 Nov 1680 கவின் சாரலன்

தொல்காப்பியர் காலத்திலிருந்து யாரும் செய்யாத ஒரு சேவையை இத்தாலியிலிருந்து இந்தியாவுக்கு --தமிழகத்திற்கு வந்த கிறித்தவ மத குரு கான்ஸ்டன்டைன் ஜோசெப் பெஸ்கி
--வீரமா முனிவர் செய்தார் . எகர ஏகார ஒகர ஓகார எழுத்துச் சீர்திருத்தத்துடன் ஒற்றெழுத்தில் முதன் முதலில் புள்ளி வைத்தவர் அவர்தான். எழுத்தில் புள்ளியின் விளையாடலைநீங்கள் எழுதியிருக்கிறீர்கள் . தமிழில் புள்ளியின் வயது 300 . நவம்பர் 8 தேம்பாவணி எனும் அருந்தமிழ் காவியம் தந்த வீர மாமுனிவரின் பிறந்த நாள். புள்ளியை வாழ்த்துவோம் .
ஆமென் . உங்களுளுக்கு வீரமா முனிவர் பரிசாக நான் அளித்திருப்பது ஐந்தாவது புள்ளி .
----அன்புடன்,கவின் சாரலன்

மேலும் சில .....

வெளிநாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்து தமிழ் கற்று தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தம் புகுத்தி சதுரகராதி செய்து பரமார்த்த குரு கதை போன்ற வேடிக்கை கதைகளுடன் பல அரிய நூல்களும் படைத்து தேம்பாவணி எனும் அருங் காவியமும் தமிழுக்குத் தந்து பெரும் தமிழ்த் தொண்டாற்றிய
கான்ஸ்டன்டைன் ஜோசெப் பெஸ்கி எனும் வீரமாமுனிவரை நினைத்துப் பார்க்கவில்லையானால் நாம் நன்றியற்றவர்கள்
ஆவோம். தனது மேற்கத்திய தமிழ் பெயரை முதலில் தைரிய நாதர் என்று தமிழில் மாற்றிக் கொண்டார் . வடமொழி மேலீடு கருதி தூய தமிழில் வீரமாமுனிவர் என்று
மாற்றிக் கொண்டார். அவரல்லவோ உயரிய தமிழர்.

எழுதியவர் : கவின் சாரலன் (9-Nov-13, 8:54 am)
பார்வை : 287

மேலே