நீர் பறவை
தீப கற்பத்தில் பிறந்த பாரதமே,
உன்னால் உயிர் விடும் என் மானுடமே!
கோடியில் புரளும் உனக்கு தெரியாது,
தெருகோடியில் இருக்கும் என் நிலைமை,
அகதிகளாய் வந்தாலும்,
அரவணைக்கும் என்னை தான்,
ஆடு தலை காவுக்காய்,
அனுப்பி வைத்த என் நாடே!
காரணமே இல்லாமல்,
கன நொடியில்,
உயிர் பறிக்கும்,
காட்டுமிராண்டி கூட்டமே,
உனக்கு காவல்,
இருக்கும் என் நாடே!
நான் செய்த தப்பென்ன,
உன் நாட்டில் பிறந்தது தான்!
அவன் நாட்டில் அவன் அழிச்சான்,
நம் நாட்டில் நீ அழிச்ச,
தமிழனா பிறந்ததால,
தாயில்லா பிள்ளைன்னு,
நினைச்சிங்களோ!
துணைக்கு தான் வர மாட்ட,
துப்பாக்கி ஒன்னு தந்து விடு,
என்னோட உயிர் காக்க,
வேறென்ன நான் செய்ய!
சொத்து கணக்கு நீ எடுத்த,
அப்படியே கொஞ்சம்,
நாங்க செத்த கணக்கையும் நீ எடு!
புயலுக்கும்,சுனாமிக்கும்,
பயந்த காலம் மலையேறி,
சிங்களனுக்கும்,எங்களனுக்கும்,
பயந்து உயிர் போயாச்சு!
கடலுக்கும் கோடு போட்டு,
கணக்கு ஒன்னு காட்டுறீங்க,
ஆகாரம் தேடி வந்தா,
அனாதையா கொல்லுறீங்க!
கடலுக்கு போன மகன்,
கரை சேரவில்லைனா,
அப்பனுக்கு தோணுடதா,
அடுத்த காவு நம்ம வீட்டில்!
செத்தவன டிவில தான்,
பாக்குறீங்க,
கொன்னவன நேருல,
போய் பாக்குறீங்க!
கடல் நீரு உப்பு அல்ல,
அது,
எங்க கண்ணீரு உப்பு!
வீரமான மண்ணுல தான்,
அவமான சின்னங்களாய்,
கடலுக்குள் மக்கி போயி,
கரை வந்து சேருரோமே!
இத்தாலி காரான தான்,
ஈசியா புடிக்கிறீங்க,
இலங்கை காரன தான்,
ஈசியா விடுறீங்க!
செத்தவன் இந்தியன்னு,
சொன்னாலும்
கேவலம் தான்,
தமிழனா செத்தான்னு,
தரணிக்கே சொல்லுங்கடா!
அடிச்சாலும் கேட்க மாட்ட,
நான் துடிச்சாலும் பார்க்க மாட்ட,
சொல்லடா என் தேசம் ,
இனி என்ன செயவதாய் உத்தேசம் !!!
அன்புடன்,
கார்த்திக்.