கவிஞனின் கடைசி ஆசை
முற்றும் துறந்த,
முனிவராக போறவனின்,
முதல் நாள் வாழ்க்கை,
என் வாழ்க்கை!
ஒரு நாளில்,
உலகை சுற்றி,
வர நினைக்கும்,
மாலுமியின் மனநிலை தான்,
என் நிலை!
பன்னிரண்டு வருடம் கழிந்து,
பூத்த குறிஞ்சி பூ,
பறிக்காத தூரத்தில்,
பூக்காரன் பாடு,
என் பாடு!
என் சாவுக்கு காரணம்,
யாரும் இல்லை,
என்ற கடிதத்தை விட்டில்,
வைத்து,
காதலியிடம் காதலை,
வெளிபடுத்த போகும்,
காதலன் அவசரம்,
என் அவசரம்!
பேச முடியா மனிதனுக்கு,
பேசுகின்ற சக்தி வந்து,
ஆளில்லா தீவினிலே,
அலைகின்ற தருணம்,
என் தருணம்!
நான் எழுதும் மை,
தீர்ந்தாலும் பரவாயில்லை,
என் ரத்தம் கொண்டும்,
கவிதை வடிப்பேன்,
இன்று முழுதும்,
ஏனென்றால்,
இதுவே,
என் இறுதி நாளாய்,
இருக்கும் பட்சத்தில்,
என் பிரிவை,
என் கவிதைகள்,
ஈடு செய்யும்!!!