ராமர்களுக்கு ஒரு எச்சரிக்கை

பெண்மணிகள்
உன் கண்மணிகளடா !

கருவிழியை கண்ணிமை
காயப்படுத்தினால்
பெண்ணிவள் என்ன
செய்வாள்!

தாலி கட்டினவன்
வேலியாக இல்லாமல்
வேசியென பேசினாயடா!

கற்பை அளக்கும்
கருவி நெருப்பென்று
எவனடா சொன்னது!

கையும் காலும் இருந்தும்
முடவனே!
நம்பிக்கை
தன்னம்பிக்கை
இரண்டும் இல்லையடா!

கண்ணை இமை
அனைத்துகொண்டால்
வேறு உலகம்
அவளுக்கு இல்லையடா!

பெண்ணின் கண்ணீரில்
காகித கப்பல் விட்டாய்!

மண்ணில் குருதி
கொட்ட செய்தாய்!

பெண், மண்
பொறுக்க மறுத்தால்
என்னாகும் !
பூகம்பம்!

பெண்ணே!
பொறு
இந்த நரிகளின் வாலை
நாம் அல்ல
நாட்கள் நறுக்கிவிடும் !

வயிறெரிந்து விடும்
மூச்சு காற்றின்
ஒருதுளி போதும்
அவர்களை போசுக்கிபோட

என்று உபதேசிக்கமாட்டேன்!

தப்பென்றால்
தட்டி கேள்!
மீறினால்
வெட்டி கேள்!

எவனுடைய
உயிரும்
எந்த பேங்கின்
லாக்கரிலும்
இல்லை
* * *

(மனைவி மீது சந்தேகம் கொண்டு
எரித்து கொன்ற கணவன் நாளிதழ் செய்தி தினந்தினம்)

எழுதியவர் : கோடீஸ்வரன் (10-Nov-13, 9:10 am)
பார்வை : 85

மேலே