எரிகிறது மெழுகுவர்த்தி

இருட்டில் பிறந்து இருட்டில் மடியும்
வாழ்வினிலே வெளிச்சம் கண்டு
மனிதனாடும் ஆட்டம் இங்கு
கொஞ்ச நஞ்சம் அல்லவே

உழைத்தவனின் உணர்வை கொன்று
திருடிய பணத்திலே தினமும் வாழ்கிறான்

லஞ்சம் தனை தஞ்சம் கொண்டு
நெஞ்சம் மகிழ கொஞ்சுகிறான்
பெற்றவளை துரத்திவிட்டு பெரும்
பங்களா கட்டி வாழுகிறான்

ஊர் பணத்தை எடுத்து ஊருராய்
உல்லாச பயணம் செய்கிறான்

கண்ணில் படும் கன்னியர்களை
கற்பழித்து காமுகனாய் திரிகிறான்
இல்லாத நிலை தெரிந்தும்
இல்தனை ஏழைக்கு கொடுக்கிறான்

தாகத்திற்கு தண்ணீர் தந்த தாய்நாட்டை
மறந்து அயல்நாட்டில் மோகம் கொள்கிறான்

கண்ணைப்போன்ற கல்வித்தர கசக்கிப்பிழிந்து காசுகேட்டு கண்டபடி ஆடுகிறான்
மதுவில் மூழ்கி மாது அவளை
மனம் வலிக்க வதைக்கிறான்

இறுதி நிலை புரியாமல் இயற்கை
அனைத்தையும் இல்லாமல் செய்கிறான்

மனிதனென்ற உயிர் வாழ மற்ற
உயிர்களை வதைக்கிறான்
மனிதம் தொலைத்து இங்கே
மனித உடலில் திரிகிறான்

பணம் மட்டுமே வாழ்வென்று
பழியும் பாவமுமாய் செய்யும்
செயலிலே பணம் சேர்கிறான்
பாதியிலே போகையிலே பரிதவிக்கிறான்

எரிகிற வெளிச்சத்தில் ஆடுமாட்டத்தில்
வெளிச்சம் மறைந்து இருளும் வருகையில்

ஆடிப்போவன் என்பதை மட்டும்
மறக்கிறான் ; இவனின் பலி
பாவங்களுக்காய் உருகி உருகி
அணையும் நாள்நோக்கி
```எரிகிறது மெழுகுவர்த்தி```

...கவியாழினி ...

எழுதியவர் : கவியாழினி (10-Nov-13, 11:00 am)
பார்வை : 153

மேலே