நான் காதலிக்கிறேன்

நான் காதலிக்கிறேன்
கேள்விப்பட்டு உடைந்தது
''இமயம் ''

இருள் தேசத்தில்
காதல் ஒளியை பார்த்துவிட்டது ,
''இதயம் ''

இருப்பு நிலவை
காதல் சின்னமாக்கச்சொன்னது
''மனசு ''

கருப்பு இரவை
காதலிக்கச்சொன்னது
''வயசு ''

வெண்தாமரை பகலை
பறிக்கச்சொன்னது
''பார்வை ''

புதிதாய் ஒரு பயம்
உடலெங்கும் பூத்தது
''வியர்வை ''

நான் காதலிக்கிறேன் .............!

எழுதியவர் : பூவிழி (19-Jan-11, 8:54 pm)
Tanglish : naan kathalikiren
பார்வை : 561

மேலே