புனித மருந்து
உன்னிப் பழங்கள்
சின்னதாய் எடுத்து
உச்சியில் வைத்து
கண்ணெனக் கொண்டு
மண்ணுளிப் பாம்பை
நாக்கென மடித்து
நீட்டியும் இழுத்தும்
காட்டி பயமுறுத்தி
கால்கள் இல்லாத
வாலதன் முடிவில்
கிலு கிலுப்பையை
ஒலித்துச் சென்று
உருளைக் கிழங்கு
வேகும் வாசத்தை
சருகுகள் தோறும்
தெளித்துச் சிந்தி
சிறியா நங்கை
புதராய் மண்டி
சிரித்துக் கிடக்கும்
சில்லென்றக் காட்டில்
வறியவன் ஒருவன்
அவசர நடையில்
கரிய வாலினை
காலால் மிதித்திட
முறியா விஷத்தை
முழங்கால் தன்னில்
முழுவதும் கொட்டி
மூச்சது முட்டிட
புரியா புதிராய்
ஓங்கிய புதரின்
பசுமை இலைகளே
புனித மருந்தாம்.