வெள்ளை புறா
மகாவம்சம் மருவியே
மலர்ந்ததாம் சிங்களம்
மன்னர் ஆட்சியில்
மன்னனும் மனிதனாகவேயிருந்தான்
புத்தமதம் ஊடுண்டபின்புதான்-அங்கு
புதியமதம் வந்ததென்கிறது வரலாறு
எட்டுத்திக்கும் வாழ்ந்த தமிழன்
எட்டிப்பார்த்தாலே தெரியும்தீவில்
எட்டுவைக்காமலேவா இருந்திருப்பான்
ஓ! இலங்கையே
ஒன்றுபட்டோம் நாங்கள் இந்தியாயென்று,
பலவேற்று மொழிகள் கொண்டாலும்
இல்லையே தீர்வு - என்பது
இல்லவே இல்லை
நீயும் ஒன்றுபட
ஒரு வல்லபாயோ - அல்லது
ஈழ விடுதலைக்கு
இன்னுமொரு காந்தியோ
இலங்கையில் வேண்டும்.