சிறுவர் தினம் - சி எம் ஜேசு
மழலைத் தெய்வங்களாக
மண்ணில் பிறந்தவர்கள் சிறுவர்கள்
சிரிப்பைத் தந்து
சிந்தனைகளை தூண்டுபவர்கள்
குழலினுள் செல்லும் காற்றாய்-நாவால்
குழைந்து பேசி ஈர்ப்பவர்கள்
மற்றோரை நம்பாமல் - தன்
பெற்றோரை மட்டும் நம்புபவர்கள்
தாயின் மடி சாய்ந்து அன்பினையும்
தந்தையின் தோல் சாய்ந்து அறிவினையும்
பெற்றுக்கொள்பவர்கள் சிறுவர்கள்
வினா எழுப்பி விடைக்கான
துடிப்பவர்கள் குழைந்தைகள்
சொல்லிடும் சொல்லால் செய்திடும் செயலால்
வருங்காலத்தை காண்பிப்பவர்கள் சிறுவர்கள்
இவர்கள் தினம் அல்ல - நம்
வாழ்விருக்கும் வரை சிறுவர்கள்தான்