கவிஞனும் காலபைரவன் தான்

ஓவியனாக இருந்திருந்தால்,
கண் பார்வை மங்கும் போதும்,
கை பலம் இழக்கும் போதும்,
என் ஓவியம் என்னாகும்!

நடன கலையில் நான்,
சிறப்பாய் இருந்திருந்தால்,
காலின் ஆட்டம் ஓயும் போது,
என் கலையும் ஓய்ந்து போகும்!

பாடகனாய் நான் மாறி,
இருந்தால்,
குரல் உடையும் போது,
என் கலை உடைந்து போகும்!

நான் கவிஞனாகி போனதினால்,
சிந்தனை ஊற்று ஓயும் வரையும்,
என் மரணம் வரையும்,
எந்த தடையும் இல்லை,

கவிஞனும் ஒரு வகையில்,
கால பைரவன் தான்!!!

எழுதியவர் : இயற்கை (11-Nov-13, 8:04 pm)
பார்வை : 125

மேலே